தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கைக்கு மத்திய அரசு நம்பிக்கை அளித்துள்ளது.தமிழகத்தின் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள நிலையில், கோதுமையின் வரத்து குறைக்கப்பட்டு இருந்தது. அதாவது 8,500 டன் கோதுமை வழங்க வேண்டிய நிலையில் 1,038 டன் கோதுமை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
அதனை மீண்டும் 8,500 டன் ஆகவே வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும், மேலும் தமிழகத்தில் இருந்து கேழ்வரகு கொள்முதல் செய்ய நேரடி நிலையங்களை அடுத்த மாதம் முதல் துவங்க உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
தமிழக அரசு கோதுமையின் வரத்தினை அதிகரிக்க கூறியுள்ள நிலையில், தற்போது கோதுமையின் விளைச்சல் சீராக உள்ளதால் விளைச்சலில் கவனம் செலுத்துவதாகவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், கேழ்வரகு விளைச்சல் அதிகம் உள்ள மாவட்டமாக விளங்கும் தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து கேழ்வரகு கொள்முதல் செய்து அதனையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாத மாதம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.
இச்செய்தி விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.