பாகிஸ்தான் அணியை மீட்டெடுத்த நோமன் அலி! சுழலில் சிக்கிய இங்கிலாந்து!

0
128
Noman Ali restored the Pakistan team! England caught in the spiral!
Noman Ali restored the Pakistan team! England caught in the spiral!

இங்கிலாந்து அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி  சரியான பேட்டிங் மற்றும் பௌலிங் செய்யாமல் சொதப்பியது. முன்னணி வீரர்களான பாபர் அசாம், வேக பந்து வீச்சாளர் அப்ரிடி ஆகிய முக்கிய வீரர்கள் சரியாக விளையாடாத காரணத்தால் முதல் போட்டியில் தோல்வி அடைந்தது.

 முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்கள் ஹாரி ப்ரூக் (262)  மற்றும் ஜோ ரூட் (317)  இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து தோல்வியை தழுவினர்.

 இதுவரை சொந்த மண்ணில் தொடர்ந்து 15 போட்டிகளில் தோல்வியை தழுவி வந்தது.  அக்டோபர் 15 இந்த தொடரின் இரண்டாவது போட்டி தொடங்கியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. பாகிஸ்தான் முன்னணி வீரர் பாபர் அசாம் க்கு பதிலாக கம்ரன் குலாம் களமிறங்கினர் இவர் அறிமுக போட்டியிலேயே தனது சதத்தை பதிவு செய்தார்.  பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸ் முடிவில் 366 ரன்கள் எடுத்தது.

 அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீரர்கள் சாஜித் கான் 7 விக்கெட்டுகளும், நோமன் அலி 3 விக்கெட்டுகளும்  எடுத்தனர்.  இரண்டாவது  இன்னிங்ஸில் 221 ரன்கள் எடுத்தது.  அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலில் சிக்கி 144 ரன்களுக்கு அனைவரும் ஆல் அவுட் ஆகினர்.

 இதில் நோமன் அலி 8 விக்கெட்டுகளும், சாஜித் கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதில் நோமன் அலி தனது முதல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரை 1-1 என்ற முறையில் சமன் செய்துள்ளது பாகிஸ்தான் அணி.