தமிழ் சினிமாவில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள வாலி, முதல் முறையாக சென்னை வந்த பொழுது உணவில்லாமல் கூட வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். பல துயரங்களை எதிர்கொண்டு 1959-ல் வெளியான அழகர்மலை காவலன் என்ற படத்தில் பாடபெற்ற பாடல் பெரிதாக பேசபடாத நிலையில் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
இருப்பினும் தன் முயற்சியை கை விடாமல் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் அனைத்திலும் பங்கேற்று தன் திறமையை வெளிப்படுத்தினார். இறுதியாக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், எம்.ஜி.ஆரின் படகோட்டி படத்தில் எழுதிய பாடல் மக்கள் மனதில் ஆழமாக இறங்கியது.இதனால் மக்கள் மத்தியில் மற்றும் திரையுலகில் வாலி பிரபலமானார்.
முக்கியமாக தொட்டால் பூ மலரும், தொடாமல் நான் மலர்ந்தேன் என்றட பாடல் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த பாடலை யார் எழுதியது என்று கேட்டு அவரை உடனடியாக நேரில் சந்தித்தார். அப்போது வாலி கடவுள் மீது நம்பிக்கை கொண்டதன் காரணமாக நெற்றியில் பட்டை , குங்குமம், சந்தனம் என பூசி இருந்தார்.
வாலியை பார்த்து இனி என்னுடைய அனைத்து படங்களுக்கும் நீங்களே பாடல் எழுதுங்கள் என்றார்.
ஆனால் எம்.ஜி.ஆர் என்னுடைய படங்களுக்கு பாடல் எழுத வரும் போது நெற்றியில் பட்டை , குங்குமம், சந்தனம் என பூச வேண்டாம் என கூறினார்.அப்பொழுது எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது. வாலிக்கு தவிர்க்க முடியாத அளவிற்கு மிகுந்த கோபம் வந்து விட்டது.
எம்.ஜி.ஆர் திட்டினால் கூட தன் மீதுள்ள பாசத்தால் தான் என எண்ணுபவர் தான் வாலி. அவ்வாறு இருக்கும்அவருக்கே மிகுந்த கோபம் வர காரணம் இந்த பட்டை , குங்குமம், சந்தனத்துடன் எனக்கு பாட்டு எழுத வேண்டாம் என கூறியது தான். இவ்வாறு அவர் சொன்னதால் இனி அவருக்கு பாடல் எழுத மாட்டேன் என்று ஆத்திரமடைந்தார்.
பிறகு எம்.ஜி.ஆர் நான் கூறியது தவறு என உணர்ந்து மன்னிப்பு கேட்டு உனக்கு உன் விருப்பம் போலவே பட்டை போட்டு கொண்டு பாடல் எழுது என்று கூறினார். வாலியின் 80 வயதில் கூட அவர் எழுதிய பல பாடல்கள் இளம் ரசிகர்களை கவர செய்கிறது. மேலும் எம்.ஜி.ஆர் பேசியது தவறு என வாலி புரியவும் வைத்தார்.