Ear Piercing for Kids: 1 வயதுடைய குழந்தைகளுக்கு காது குத்தும் பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்.
குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகுவதற்குள் ஒரு சிலர் காது குத்துவதுண்டு. அவ்வாறு ஒரு வயதிற்குளிருக்கும் குழந்தைகளுக்கு காது குத்தும் போது பல முக்கியமானவற்றை கவனிக்க வேண்டியது கட்டாயம். அந்த வகையில் முதலில் காது குத்துவதற்கு முன் உங்களது மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது.
பெரும்பாலும் பிறந்த 6 அல்லது 10 மாததிற்குள்ளான குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாகவே இருக்கும். இவ்வாறு நாம் காது குத்துவதால் ஏற்படும் புண் மூலம் அவர்களுக்கு தொற்று பரவ அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல காத்து குத்துபவரும் ஒரு சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி காது குத்துபவர் கட்டாயம் கையுறை மற்றும் காது குத்த பயன்படுத்தப்படும் இயந்திரம் உள்ளிட்டவையில் உபோயோகிக்கும் ஊசி இவையனைத்தையும் சரிபார்க்க வேண்டும்.
அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு காது குத்தும் வலியானது தெரியாமல் இருக்க தற்பொழுதெல்லாம் பேஸ்ட் போன்று ஒன்றை உபோயோகிக்கின்றனர். இதை உங்களது மருத்துவரின் ஆலோசனைப்படி கேட்டு உபயோகிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் வலியை சற்று குறைக்கலாம்.
அதுமட்டுமின்றி 1 வயதிற்குள் காது குத்தும் பொழுது அவர்கள் அதை தொட்டுக் கொண்டே இருப்பார்கள், இதனால் காதின் புண்ணானது விரைவில் ஆராமல் போகும். இதனையெல்லாம் தவிர்க்க 1 வயதுக்கு மேலுடைய குழந்தைகளுக்கு காது குத்துவது மிகவும் நல்லது.