தீபாவளி நெருங்க நெருங்க தங்க கடையில் நிரம்பும் கூட்டம்! ஆனால் தொட முடியாத உயரத்தில் தங்கம் விலை! ஏழை எளிய மக்களின் கனவு நிறைவேறுமா? என்ற அச்சம்! நம் முன்னோர்கள் காலத்தில் தங்கம் விலை அதாவது 1980-இல் இந்தியாவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை சராசரியாக 180-ஆக இருந்தது. ஆனால் தற்போதைய தங்க விலை சுமார் ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியதால் ஏழை எளிய மக்களின் தங்கம் வாங்கும் கனவு நிறைவேறுமா? என அச்சத்தில் உள்ளனர்.
தங்கத்தை விட வீட்டு மனை அதிக இலாபம் என்பார்கள். ஆனால் அந்த மனை இருக்கும் இடத்தை பொறுத்து தான் அதன் இலாபம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் தங்கம் உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் அதற்கான மதிப்பு குறைவதில்லை. எனவே மக்கள் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்கள்.
வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உயரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தீபாவளி காரணமாக தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58 ஆயிரத்தை தாண்டி விற்க காரணம் அனைத்து நிறுவனங்களிலும் போனஸ் தருவதால் மக்கள் தனது மகள், மகன், மருமகள் என அனைவருக்கும் தங்கம் வாங்கி தீபாவளியை சிறப்பாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதே. இதனால் தீபாவளி காரணமாக தங்கம் கிடு கிடு என விலை உயர்ந்தது.
தொடர்ச்சியாக தங்கம் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த தகவல் தங்கம் வாங்குபவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. மக்கள் தங்கம் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இப்படியே தங்கம் விலை அதிகரித்து கொண்டே சென்றால் எதிர் காலத்தில் மக்கள் தங்களின் மகள், பேரன் , பேத்தி அதாவது தனது வாரிசுகளுக்கு எப்படி தங்கம் சேர்க்க போகிறோம் என்ற அச்சத்தில் உள்ளார்கள் .