தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய முன்னணி நடிகரான நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அதற்கான முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில், வி சாலையில் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.முதலில் இந்த மாதம் 23ம் தேதி நடைபெற இருந்த நிலையில் போலீஸ் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் கெடுபிடியாக இருந்த காரணத்தால் முதல் மாநாடானது வருகிற 27ம் தேதி மாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி வி சாலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதன் வேலைப்பாடுகள் தடைபட்டன. தற்போது மீதும் தொடங்கிய வேலைப்பாடு ஆனால் சனி விடுவதாக இல்லை போல இன்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இங்கு த வே க தலைவர் தொண்டர்களை அருகில் வந்து காணும் வகையில் ராம்ப் வாக் மேடை, மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்த பேரி கார்டு அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கு 500 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு சி சி டி வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மிஸ்ஸிங் ஹெல்ப் ஜோன் உதவி மையம் அதாவது மாநாட்டுக்கு வரும் தொண்டர்களில் தெரிந்த நபர் கூட்டத்தில் காணமல் போனால் கண்டுபிடித்து தர மாநாட்டு திடல் இருக்கும் அனைத்து பார்க்கிங் பகுதியிலும் அமைக்கப்படவுள்ளது .தேவையான கழிப்பறை வசதி ஏற்பாடு இருக்கும். இருக்கை அருகில் அனைவர்க்கும் குடிநீர் வசதி செய்யப்படவுள்ளது. மாநாட்டு திடல் மற்றும் பார்க்கிங் பகுதியில் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட்டு அருகில் 150 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருப்பார்கள் உடனடியாக உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் மருத்துவர்கள், உதவி மையங்களில் உள்ள உதவியாளர்கள் அனைவரும் எளிதாக அறியும் வகையில் அவர்களுக்கு ஒரே சீருடை, 5 நுழைவாயில் மற்றும் 15 வெளியேறும் வாயில் என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.