பெங்களூருவில் நடைபெற்று வரும் நியூசிலாந்து உடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இந்த போட்டியின் முதல் போட்டி மழை காரணமாக நடைபெறவில்லை இரண்டாம் நாள் தொடங்கிய இந்த போட்டி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. அதிரடியாக விளையாட நினைத்த இந்திய அணி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதில் விராட் கோலி , சர்ப்ராஸ் கான் , கே எல் ராகுல் , ஜடேஜா , அஸ்வின் ஆகிய வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் போல் இல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி அதில் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய சர்ப்ராஸ் கான் சிறப்பாக விளையாடி சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 195 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே முதல் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் அறிமுகமான முதல் போட்டியில் சதம் அடித்த சாதனை பட்டியலில் ஒன்பதாவதாக இணைந்தார். இதற்கு முன் இந்த சாதனை பட்டியலில் கவாஸ்கர்,சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி , அசாருதீன், திலிப் வெங்சர்க்கார், ஷிகர் தவான், சுப்மன் கில் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து இனி வரும் போட்டிகளில் இவர் விளையாடுவாரா? அல்லது நீக்கப்படுவாரா?