இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விலாயத் உள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது பெங்களூருவில் நடைபெற்றது முதல் நாள் மழை காரணமாக இரண்டாம் நாள் தொடங்கப்பட்டது. இந்தியா டாஸ் வென்றது.
பொதுவாக இந்திய மைதானங்களில் பிட்ச் ஆனது வேக பந்து வீச்சாளர்களுக்கு குறைவாகவே சாதகமாக இருக்கும். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் அவர்கள் அதிகமாக விக்கெட்டுகள் எடுக்க முடியும். இதன் காரணமாக இந்திய அணி கேப்டன் அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்களை எடுத்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. ஆனால் இந்திய அணியின் மோசமான பேட்டிங் ஆல் முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 402 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி 462 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது இதில் சர்ப்ராஸ் கான் சதம் விளாசினார். இரண்டாவது இன்னிங்ஸில் 107 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என களமிறங்கி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் எப்போதும் இந்திய மண்ணில் சிறப்பாக விளையாடி எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள். ஆனால் இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா 3 விக்கெட்டுகளும்,அஸ்வின் 1 விக்கெட் மட்டும் எடுத்திருந்தார் அதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் சரியாக பங்காற்ற வில்லை. இந்த தோல்வியும் நல்லதுதான் அடுத்த போட்டியில் கவனமாக சுழற்பந்து வீச்சாளர்கள் செயல்படுவார்கள். அடுத்து வரும் போட்டிகளில் இந்திய அணி வெற்றி அடையும் என கூறியுள்ளார்.