தலைகவசம் இனி அணிந்திருந்தாலும் அபராதம்?? போக்குவரத்து காவல்துறை புதிய அறிவிப்பு!!

0
582
Fine even if helmet is worn anymore?? Traffic Police New Notification !!
Fine even if helmet is worn anymore?? Traffic Police New Notification !!

இருசக்கர வாகன ஓட்டிகள் உஷாராக இருக்க வேண்டும். ஏனென்றல்  தற்பொழுது போக்குவரத்து காவல் துறையிடம் இருந்து வந்த தகவலின்படி தலைகவசம் (helmet) அணிந்திருந்தாலும் அபராதம் விதிக்கப்படும்.  காரணம் “தலைகவசம் உயிர் கவசம்” என அனைவருக்கும் தெரியும். ஆனால் மக்கள் தலைக்கவசம் அணிவதை விளையாட்டாக நினைக்கிறார்கள்.

போக்குவரத்து காவல்துறை மக்களின் நலனை கருதி தலைக்கவசம் அணிய சொல்கிறார்கள் என யாரும் எண்ணுவதில்லை. அப்படியே அணிந்திருந்தாலும் முறையாக அணிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு பைக் ஓட்டுபவர் தலைக்கவசம் அணிந்திருந்தாலும், அது திறந்திருந்தால் ரூ.1000 அபராதமும், தலைக்கவசத்தை இறுக்கமாக கட்டா விட்டாலும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் இருசக்கர வாகனம் ஓட்டும்போது  ISI முத்திரை பதித்த ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அதற்கும் மோட்டார் வாகன சட்ட பிரிவு 194D MVA-இன் கீழ் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். எனவே போக்குவரத்து காவல்துறை விதித்துள்ள அனைத்து தகவல்களும் முறையாக தெரிந்து கொண்டால் இந்த அபராதத்தை தவிர்க்க முடியும். இருசக்கர வாகனம் ஓட்டும் மற்றும் பின் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என கூற காரணம் தலையில்  ஏற்படும் காயங்களை தவிர்க்க வேண்டும் என்பதற்கு மட்டும். ஏனென்றல் பெரும்பாலான மக்கள் தலையில் ஏற்படும் காயங்களால்  காரணத்தால் உயிரிழக்கின்றனர்.

இனிமேல் அந்த நிலை ஏற்படுவதை தவிர்க்க கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு எடுத்துள்ள நடவடிக்கையை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறை எதிர்பார்கிறது.

Previous articleகமல் முன் நடனமாடிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா!! இருவரும் இணைத்த நடித்த 1 திரைப்படம்!!
Next articleஒரே போன் கால் தான் பாக்குறியா! உதயநிதி இங்க இருப்பார் போலீஸாரிடம் ரகளை செய்த தம்பதியினர் வீடியோ வைரல்!