நாடு முழுவதும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழகத்திற்கு இரண்டாம் இடம். அதேபோல் சாலை விபத்துகளால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என மத்திய மாநில அரசுகளின் தரவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளன.
இந்தியா முழுவதும் 2023ம் ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில் 1.73 லட்சம் பேர் பலியாகி உள்ளார்கள். நாளொன்றுக்கு 474 பெரும், ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 4.63 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். இந்த தரவினை 2022 ம் ஆண்டு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 4 சதவீதம் அதிகம்.
கடந்த 5 ஆண்டு தரவுகளை ஒப்பிடுகையில் 2021 ம் ஆண்டு முதல் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதில் உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், தமிழகம் உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சாலை விபத்து உயிரிழப்பு அதிகரித்துள்ளது. கேரளா, ஆந்திரா, பீகார், டெல்லி மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் விபத்துக்கள் கடந்தாண்டு குறைந்துள்ளது.
உத்திர பிரதேசத்தில் 23,652 பேரும், தமிழகத்தில் 18,347 பேரும், மகாராஷ்டிரா 15,366 பேரும் விபத்துக்களால் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்திலும், மத்திய பிரதேசம் இரண்டாம் இடத்திலும்,கேரளா மூன்றாம் இடத்திலும் உள்ளன.