பொதுவாக ரயில் பயணங்களில் AC பெட்டிகளில் பயணம் செய்யும் போது போர்வை வழங்குவது வழக்கம். இந்த போர்வைகள் குறித்து அடிக்கடி புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து எத்தனை நாட்களுக்கு ஒரு முறை போர்வைகள் துவைக்கப்படுகின்றன என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இது குறித்து அளித்த பதில் பல விதமான விவாதங்களை கிளப்பியுள்ளது.
ஒவ்வொரு நாளும் ரயில் பயணத்தில் சுமார் 23 கோடி பேர் பயணிக்கின்றனர். இதில் இலட்சக்ணக்கான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் ரயில்வே துறை மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. நேரம் கடைபிடிக்கப்படுவதில்லை, போதிய ரயில்கள் இல்லை, அதிகமான முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் இல்லை என்று பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
போர்வை குறித்து கேள்விக்கு ரயில்வே ஹவுஸ் கீப்பிங் மேலாண்மை பிரிவு அதிகாரி ரிஷா குப்தா பதிலளித்துள்ளார். மாதத்திற்கு ஒரு முறை துவைக்க அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ரயில்வே துறை ஊழியர்கள் கூறுகையில் போர்வையில் அழுக்கு கரை துர்நாற்றம் ஈரப்பதம் இல்லை என்றால் அதை மடித்து மீண்டும் பயன்பாட்டிற்கு வைக்கப்படுவதாகவும், மேற்குறிப்பிட்டவை இருந்தால் துவைப்பதற்கு அனுப்பிவைக்க படுவதாகவும் கூறியுள்ளனர். ரயில்வே துறையில் போர்வை, கம்பளி, தலையணை உறை, ஆகியவற்றை துவைக்க 46 சலவை மையங்கள் உள்ளன.