தமிழக ஆளுநர் சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்றுள்ளார் அந்த விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடிய போது வாழ்த்து பாடலில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் ‘ என்ற வரிகள் பாடலில் புறக்கணிக்கப்பட்டது.இச்சம்பவம் தமிழக கட்சியினரிடையே விமர்சனத்துக்கு உள்ளானது இது தொடர்பாக சிலர் தங்கள் எதிர்ப்பு பதிவை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பதிலளித்த விழாவை நடத்தியவர்கள் கவனச்சிதறல் காரணமாக அந்த வரியானது தவற விடப்பட்டது என அறிக்கை வெளியிடப்பட்டது.
இதுகுறித்து நாம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் நான் ஆட்சிக்கு வந்தால் தற்போது இருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தினை முழுவதுமாக நீக்கி விடுவேன் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முற்றிலும் நீக்கி விடுவேன் என்று அவர் சொல்லவில்லை அதற்கு பதிலாக சிறப்பான பாடல் ஒன்றை வெளியிடுவேன் என்று அவர் கூறியதாக விளக்கமளித்தார்.
முன்னதாக திருமாவளவனால் முதலமைச்சர் ஆக முடியாது அவருக்கு அந்த தகுதி இல்லை எனவும் மத்திய அமைச்சர் எல் முருகன் கூறியதற்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முதல்வர் ஆகும் எல்லா தகுதியும் இருப்பதாகவும், அவரை எப்படியாவது முதலமைச்சர் ஆக்குவேன் என்றும் கூறியிருந்தார்.