இசைஞானி என்றழைக்கப்படுபவர் தான் இளையராஜா. இவர் இன்றளவும் சுமார் 48 ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். ஆனால் இப்பொழுது பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும் அவரை வெல்ல யாராலும் முடியாது. அந்த அளவிற்கு திறமை கொண்டுள்ளார். அவருக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் தனக்கு பிடிக்கவில்லை என முகத்துக்கு நேராக சொல்லிவிடும் தைரியம் கொண்டவர் .
அதனால் அவர் பெரும்பாலும் தலைக்கனம் கொண்டவர் என கூறுவார்கள். இவரின் இசைக்கு இன்றளவும் பல ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இளையராஜா இசையமைப்பாளராக பயணித்து வந்த பாதையில் பிரபல இயக்குனர் ஒருவர் திரைப்படத்தில் இசையமைக்க ஒப்பந்தம் வாங்குகிறார். அப்பொழுது அந்த கதையை கேட்டு இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை.
ஆனாலும் தனது தொழில் மீது கொண்ட பக்தியின் காரணமாக எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் அந்த திரைப்படத்திற்கு முழு பாடலையும் அமைத்து கொடுத்தார். அந்த படம் தான் கடந்த 1985ம் ஆண்டு தமிழ் சினிமாவில் “நடிகர் திலகமாய்” திகழ்ந்த சிவாஜி கணேசனின் நடிப்பில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான “முதல் மரியாதை” என்கிற மெகா ஹிட் திரைப்படம்.
அப்போது பாரதிராஜா இளையராஜாவிடம் எனது கதை பிடிக்கவில்லை என்று சொன்னாய் ஆனால் பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது என கண்ணீர் தழுவி கட்டி அணைத்து நன்றி தெரிவித்தாராம். மேலும் பாரதிராஜாவின் பல திரைப்படத்திற்கு இளையராஜாவே இசையமைத்து வருகிறார்.