இரண்டாவது போட்டியிலும் இல்லை!! காயத்தால் தவிக்கும் வில்லியம்சன்!!

0
117
Not even in the second match!! Williamson suffering from injury!!
Not even in the second match!! Williamson suffering from injury!!

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டி புனேவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை தற்போது குணமடைந்து வருகிறார். பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் விலக கட்டாயம் ஏற்பட்டது.  அவர் தனது முழு உடல் தகுதியை மீட்டெடுக்க நியுசிலாந்தில் பணியாற்றினார். நியூசிலாந்து அணி தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் களமிறங்குவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

நாங்கள் வில்லியம்சனை கண்காணித்து வருகிறோம் . ஆனால் இன்னும் 100% சதவீதம் பொருத்தமாக இல்லை வரும் நாட்களில் மேலும் முன்னேற்றம் காணவும், இனிவரும் போட்டிகளில் அவர் பங்கு பெற வேண்டும் என்று விரும்புகிறோம். அவரை தயார் படுத்தி கொள்ள முடிந்த வரை அவகாசம் அளிப்போம். ஆனால் எச்சரிக்கையான அணுகுமுறையை தொடர்வோம் என்று கேரி ஸ்டெட் கூறினார்.

Previous articleவிவசாயிகளுக்கு குட் நியூஸ் !! மின்சார வாரியம் கொடுத்த சர்ப்ரைஸ் !!
Next articleநாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய முக்கிய உறுப்பினர்!! பரபரப்பு தகவல்!!