“கோட் ” இந்த படத்தை பார்த்து எடுத்தது.. ஒப்புக்கொண்ட வெங்கட் பிரபு!!

கோட் படத்தின் வெற்றி குறித்து பேசும் பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் , இது ராஜதுரை படத்தின் கதை என தெரிந்து இருந்தால் நான் அந்த படத்தை விட இப்படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருப்பேன் எனக் கூறியுள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள கோட் படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் இச்செய்தி வெளியாகியுள்ளது.
ராஜதுரை படத்தின் கதை சுருக்கம் :-
ராஜதுரை என்ற போலீஸ் அதிகாரி, மாயாண்டி என்ற கும்பலைப் பிடித்து சிறைக்கு அனுப்புவதில் வெற்றி பெறுகிறார். பின்னர், மாயாண்டி ராஜதுரையின் மகன் விஜய்யைக் கடத்திச் சென்று குற்றவாளியாக வளர்க்கிறார்.
கோட் படத்தின் கதை சுருக்கம் :-
பல வருட வெற்றிகரமான செயல்பாடுகளுக்குப் பிறகு, தனது மகனுக்கு நேர்ந்த சம்பவத்தால் தனது பணியில் இருந்து திடீரென்று ஓய்வு பெற்று, அமைதியான, சாதாரண வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். இருப்பினும், ஒரு கடந்தகால பணி அவரை வேட்டையாட மீண்டும் வரும்போது, ​​பேரழிவைத் தடுக்க அவர் தனது குழுவுடன் மீண்டும் இணைகிறார். இதுவே தளபதி விஜய் நடித்துள்ள “தீ கிரேடஸ்ட் ஆப் ஆல் டைம்” படத்தின் கதைச் சுருக்கம் ஆகும்.