மழைக்காலங்களில் அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனைகள் ஒன்று பூச்சி நடமாட்டம். வீட்டில் இரவு நேரத்தில் பல்பு வெளிச்சதில் இந்த பறக்கும் பூச்சிகள் அதிகளவு காணப்படும்.இதை கன்ட்ரோல் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் உதவும்.
தேவையான பொருட்கள்:
1)கிராம்பு – 10
2)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
நாட்டு மருந்து கடையில் கிராம்பு எண்ணெய் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வங்கிக் கொள்ளவும். இயலாதவர்கள் தற்பொழுது சொல்லப்படும் முறையில் கிராம்பு எண்ணெய் தயாரித்துக் கொள்ளவும்.
முதலில் 10 கிராம்பு அதாவது இலவங்கம் எடுத்து உரல் அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் சிறிய வாணலி ஒன்றை வைத்து இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
அடுத்து அரைத்த கிராம்பு பொடியை அதில் போட்டு ஒரு நிமிடம் சூடாக்கவும். பிறகு இதை ஆறவிட்டு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாலை நேரங்களில் வீட்டை சுற்றி ஸ்ப்ரே செய்துவிடவும்.குறிப்பாக வீட்டில் பல்பு உள்ள இடத்தை சுற்றி இந்த கிராம்பு எண்ணெயில் ஸ்ப்ரே செய்துவிடவும். இப்படி செய்வதால் வீட்டில் பூச்சிகள் நடமாட்டம் கட்டுப்படும்.
தேவையான பொருட்கள்:
1)வேப்பிலை எண்ணெய்
2)தண்ணீர்
செய்முறை விளக்கம்:
ஒரு கிண்ணத்தில் 20 மில்லி வேப்பிலை எண்ணெய் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்துவிடவும்.பிறகு இதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பூச்சிகள் நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை நீங்கும்.
வேப்பிலை எண்ணெய் இல்லாதவர்கள் வேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணையில் காய்ச்சி ஆறவிட்டு வடிகட்டி பயன்படுத்தலாம்.
அதேபோல் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை நன்கு மிக்ஸ் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வீட்டை சுற்றி ஸ்ப்ரே செய்தால் அதன் நடமாட்டம் குறையும்.