Bangalore: கண் மழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கும் பெங்களூர் சரிந்த விழுந்த கட்டிடம்.
கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் சூழ்ந்திருக்கிறது.
மேலும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி அங்கன்வாடி மையங்கள் போன்றவற்றிற்கு பெங்களூரு நகர்புற மாவட்ட துறை விடுமுறை அறிவித்திருக்கிறது.IT நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.
பெங்களூரு கிழக்கு பகுதியில் உள்ள ஹோரமவு அகாரா பகுதியில் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணி அதிகாரிகள், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டிடம் இடிந்து விழுந்ததை பார்த்த நபர் கனமழை காரணமாக ஏழாவது மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. மொத்தம் 20 பேர் அங்கிருந்தார்கள். எங்களுடைய தொழிலாளர்கள் 7 பேர் மாட்டிகொண்டனர் அதில் ஒருவர் இறந்துவிட்டார்.
மூன்று பேர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தற்போதைய நிலவரப்படி 14 பேர் கட்டிட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும், மேலும் 5 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது