இவர் நன்றாக விளையாடினால் டீம் தோற்கும்!!  கே எல் ராகுலை வெளியே அனுப்பிய LSG!!

Sports:  கே எல் ராகுல் நன்றாக விளையாடினால் அணி தோற்கும் என LSG  அணியிலிருந்து நீக்கப்படுவதாக வெளியான தகவல்.

வருகிற நவம்பர் மாதம் ஐ பி எல் தொடரின் மெகா ஏலம் நடக்க உள்ளது அதற்கு முன் அனைத்து அணிகளும் தங்களது அணிகளில் 5 வீரர்களை தக்க வைத்து கொள்ள முடியும். அதன்படி ஒரு சில அணிகள் அவர்களின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.இந்நிலையில் LSG அணி தங்கள் வீரர் பட்டியலை வெளியிடவில்லை.

இவர் நன்றாக விளையாடினால் டீம் தோற்கும்!!  கே எல் ராகுலை வெளியே அனுப்பிய LSG!!

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி மூன்று ஆண்டுகளாக தங்கள் அணியின் கேப்டனாக இருக்கும் கே எல் ராகுலை விடுவிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.அந்த அணியின் புதிய ஆலோசகராக பொறுப்பேற்றுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகிர் கான் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

கடந்த 2024 ம் ஆண்டு நடைபெற்ற ஐ பி எல் போட்டி ஒன்றில் இந்த அணி தோற்க முக்கிய காரணமாக இருந்த கே எல் ராகுலை LSG அணியின் உரிமையாளர் காலத்தில் வைத்து வாக்குவாதம் செய்த வீடியோ வலைதளங்களில் பரவியது. இதை சாதாரண விஷயம் என்று அந்த நிர்வாகம் சமாளித்து மோடி மறைத்தது.

இவர் எந்த போட்டிகளில் நன்றாக விளையாடுகிறாரோ  அந்த போட்டியில் அந்த அணியே தோல்வி அடைகிறது. இதற்காக இவர் நீட நேரம் காலத்தில் நின்று சரியாக விளையாட நினைத்து டெஸ்ட் போட்டியை போல விளையாடுகிறார் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இதனால் தான் இவர் இந்திய அணியின் டி20 போட்டிகளில் சேர்க்கப்படுவதில்லை. இதனை தொடர்ந்து இவர் LSG அணியில் இருந்தும் நீக்க படுவதாக தகவல் வெளியாகி வருகிறது. பெங்களூர் அணி அவரை எடுக்கப்போவதாக பேசபடுகிறது.