Sports:எத்தனை கோடி கொடுத்தாலும் வீரர்களை வெளியிடாத அணிகள் மற்றும் முக்கிய வீர்கள்
ஐபிஎல் 2025 ம் ஆண்டிற்கான சீசனுக்கான மெகா ஏலம் வருகின்ற நவம்பர் மாதம் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் எந்த அணியில் யார் யார் தக்க வைக்கப்பட்டுள்ளார்கள் யார் ஏலத்தில் பங்கு பெறுவார்கள் என்ற தகவல் வருகிற அக்டோபர் 31 ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் ஒவ்வொரு அணியும் எந்த வீரரை தக்க வைத்துக் கொள்வது என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. ஒரு அணி அதிகபட்சமாக இந்த மெகா ஏலத்திற்கு முன்பு 6 வீரர்களை தங்கள் அணியில் தக்க வைத்து கொள்ளலாம். இதில் 6 வீரர்களும் வெளிநாடு வீரர்களாக கூட இருக்கலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
சில அணிகள் எத்தனை கோடி கொடுத்தாலும் தனது வெளிநாட்டு வீரர்களை விடுவிக்க போவதில்லை என்று உறுதியாக இருக்கின்றன.அப்படிப்பட்ட வீரர்களில் முதலாவது ஜாஸ் பட்லர் இவர் RR அணிக்கு தொடக்க வீரராக களமிறங்குவார். இவர் ipl தொடரில் 3582 ரன்கள் அடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் நிக்கோலஸ் பூரன் இவர் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியின் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன்.
மூன்றாவது வீரர் டிராவிஸ் ஹெட் கடந்த சீசனில் அதிரடியாக விளையாடினார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதி போட்டி வரை செல்ல இவரும் ஒரு முக்கிய காரணம். நான்காவது ரஷித் கான் இவர் குஜராத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் அதிரடியாக பேட்டிங் செய்யும் வீரர். ஐந்தாவது சி எஸ் கே அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் பத்திரானா. எக்காரணத்தை கொண்டும் இந்த வீரர்களை விடுவிக்க போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.