cricket: விராட் கோலி இடத்தை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பண்ட் புதிய பட்டியல் வெளியீடு
தற்போது இந்திய அணி நியூசிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தியாவில் சுற்றுபயனம்மேர்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி வீர்கள் சரியாக பேட்டிங் செய்யத காரணத்தால் முதல் இன்னிங்க்ஸில் 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்க்ஸில் 462 ரன்கள் எடுத்த போதும் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர தீவிர பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகிறது இந்திய அணி.
இந்த நிலையில் இந்திய-நியூசிலாந்து இடையேயான முதல் போட்டி மற்றும் பாகிஸ்தான்-இங்கிலாந்து இடையேயான 2 வது போட்டி முடிவுற்ற நிலையில் வீரர்களின் செயல்பாடுகள் கணக்கில் கொண்டு புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அதில் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் ஜோ ரூட், ஜெய்ஷ்வால் 4 வது இடத்திலும், ரிஷப் பண்ட் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி 3 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட்கோலி 7 வது இடத்தில் இருந்து 8 வது இடத்திற்கு சரிந்துள்ளார்.