தமிழகத்தில் 144 தடை உத்தரவு! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா ?

0
140
144 Prohibitory Order in Tamil Nadu! Which districts do you know?
144 Prohibitory Order in Tamil Nadu! Which districts do you know?

தமிழகத்தில் 223-வது குருபூஜை, மற்றும் தேவர் ஜெயந்தி ஆகிய தினங்கள் ஒட்டி வருவதால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில்  சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் மணிமண்டபம் அமையப்பெற்றுள்ளது. வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி   சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் அரசு விழாவாக அனுசரிக்கப்பட உள்ளது.

பிறகு சமுதாயம் சார்பில் அக்டோபர் 27 ஆம் தேதி  காளையார் கோவிலில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய மக்கள் பல ஆயிரம் பேர்  வருவார்கள். இதனை தொடர்ந்து அக்டோபர் 30 ஆம் தேதி ராமநாதபுரம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுகிறது.

இதனால்  சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரையின் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 23 முதல் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தார் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்.

Previous articleநான்கு பள்ளிகளில் போலி என்.சி.சி முகாம் நடத்தப்பட்டது எப்படி?? ஐகோர்ட் சரமாரி கேள்வி!!
Next articleடி20  போட்டிகளில் உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே!!சிக்கந்தர் ராசா வின் அதிரடி ஆட்டம்!!