தமிழகத்தில் ஏற்கனவே 100 யூனிட் வரை மின்சார கட்டண தள்ளுபடி இருந்த நிலையில், தற்போது தீபாவளியில் இருந்து 200 யூனிட் வரை மின்சார கட்டண தள்ளுபடி என அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு கொடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசும் தங்களது ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
200 யூனிட் வரை மின்சார கட்டண தள்ளுபடி என்பது பொருளாதாரத்தில் பின் தங்கிய தனி நபருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற பதிவு செய்ய வேண்டும் என்றும், அதற்காக ஆதார் அட்டை, மின்சார பில், வருமானச் சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு எண் ஆகியவற்றை எடுத்துச் சென்று பதிவு செய்ய வேண்டும்.
மேலும், 200 யூனிட் மின்சாரத்திற்குள் பயன்படுத்துபவருக்கு மின்சார கட்டணம் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 200 யூனிட் மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்துவோருக்கு இது பொருந்தாது என்றும் அரசு கூறி உள்ளது.