ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் ஜிகாவா மாகாணத்தில் கடந்த 15 -ம் தேதி பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளாது. இந்த விபத்து டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் லாரி கவிழ்ந்து விபத்தானது.
இதனால் லாரியில் இருந்து பெட்ரோல் கசிந்து வெளியேறியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மக்கள் பெட்ரோல் சேகரிக்க சாலையில் குவிந்தனர். மேலும் பெட்ரோல் சேகரிக்க மக்கள் அதிகமாக திரண்டனர் யாரும் எதிர்பாக்காத நிலையில் டேங்கர் லாரி வெடித்து சிதறியது.
இதில் சம்பவ இடத்திலே 94 பேர் உயிரிழந்தனர். 200 பேர்க்கு மேல் படுகாயம் அடைந்த நிலையில் தற்போது 181 பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.