Cricket: இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் தோற்றது இந்திய அணி.
இந்தியா-நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனே மைதானத்தில் தொடங்கியது. இதில் இந்திய அணி டாஸ் தோற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. மேலும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு களமிறங்கியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அக்டோபர் 16-20 தேதி பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் இந்திய அணி சரியாக பேட்டிங் செய்யவில்லை இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் 5 முக்கிய வீரர்கள் ரன் ஏதும் அடிக்கால் டக் அவுட் ஆகினர். அதனால் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர். இதனால் நியூசிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றது.
The Indian team took the first blow before the start of the match
இந்நிலையில் இரண்டாவது போட்டியானது இன்று காலை தொடங்கியது. இந்த போட்டி நடைபெறும் புனே மைதானத்தில் முதல் நாள் மட்டும் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் ஆனால் இந்திய அணி டாஸ் தோற்றது. நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. இந்த டாஸ் தோல்வி இந்திய அணிக்கு முதல் அடியாக பார்க்கபடுகிறது.இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் இந்த தொடரை இழக்க நேரிடும்.
இதுகுறித்து இந்திய னை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் நானும் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ய விரும்பினேன். பிட்ச் காய்ந்து இருப்பதால் முதல் 10 ஓவர் எவ்வளவு முக்கியம் என்பதை அறிவோம். முதலில் பேட்டிங் செய்யும் நியூசிலாந்து அணி வீரர்களை முதல் நாள் முடிவதற்குள் வீழ்த்துவதே முக்கியம் இரண்டாவது நாள் வரை பேட்டிங் செய்தால் பெரிய ஸ்கோரை எட்டி விடும். இதனால் இந்திய அணி பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டும் கூறினார்