1 பெண்ணுக்கு 3 ஆண்கள்.. கண்ணதாசனிடம் உதவி கேட்ட பாலச்சந்தர்!! வெளியான சுவாரஸ்ய தகவல்!!

Photo of author

By Gayathri

1 பெண்ணுக்கு 3 ஆண்கள்.. கண்ணதாசனிடம் உதவி கேட்ட பாலச்சந்தர்!! வெளியான சுவாரஸ்ய தகவல்!!

Gayathri

Updated on:

அவர்கள் என்ற படத்திற்காக இயக்குனர் பாலச்சந்தர் அவர்களுக்கு கண்ணதாசன் ஏற்கனவே இரண்டு பாடல்களை எழுதிக் கொடுத்த நிலையில், பாலச்சந்தர் அவர்களுக்கு மூன்றாவதாக மற்றொரு பாடல் தேவைப்பட்டுள்ளது.

ஆனால் கவிஞர் கண்ணதாசன் அவர்களோ மற்ற வேலைகளில் பிஸியாக இருந்ததால் அவரிடம் சென்று மூன்றாவது பாடலை கேட்க முடியாத நிலை இயக்குனர் பாலச்சந்தர்-     க்கு இருந்துள்ளது.

1976 ஆம் ஆண்டு சினிமா பத்திரிகைகள் ஒரு புது விதமான நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்கின்ற முடிவெடுக்கின்றனர். மேலும் கண்ணதாசனின் பிறந்தநாள் விழாவும் வருவதால் அவரை வைத்து இந்நிகழ்ச்சியை நடத்தலாம் என்றும் முடிவையும் எடுக்கின்றனர். இந்நிகழ்ச்சி புது விதமாகவும் வித்தியாசமாகவும் நடைபெற வேண்டும் என்ற விருப்பமும் அவர்கள் மனதில் எழுகிறது.

அந்த காலத்தில் சினிமா பாடல்கள் எவ்வாறு உருவாகிறது என்பது யாருக்கும் தெரியாது. எனவே இந்நிகழ்ச்சி அதை அனைவருக்கும் தெரியப்படுத்தும்படி அமைய வேண்டும் என செய்தி பத்திரிக்கையாளர்கள் முடிவு செய்து அதனை கவிஞர் கண்ணதாசனிடம் கூறாமல் விட்டு விடுகின்றனர்.

இயக்குனர் பாலச்சந்தர் அவர்களுக்கு “காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி, கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடுமா?’ என்ற பாடலையும் ‘இருமனம் கொண்ட திருமண வாழ்வில், இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்” என்ற இரு பாடல்களை கண்ணதாசன் இயற்றி கொடுத்த நிலையில் மேலும், தன்னுடைய படத்தின் மூன்றாவது பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதி தர வேண்டும் என்ற தேவை ஏற்கனவே இருந்துள்ளது.

எனவே இயக்குனர் பாலச்சந்தரும் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து விழா நிகழ்ச்சியின் மேடையில் பாலச்சந்தர் கண்ணதாசனிடம் “ஒரு பெண்ணுக்கு மூன்று ஆண்கள் போட்டி போடும் நிலையில்; அந்தப் பெண் முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கிறாள்” என்ற சூழ்நிலையை கூறியவுடன் அந்த விழா மேடையிலேயே கண்ணதாசன் பாடல் இயற்றி கொடுத்துள்ளார்.

அவ்வாறு, கண்ணதாசன் இயற்றிய அற்புதமான பாடல் “அங்கும் இங்கும் பாதை உண்டு, இன்று நீ எந்தப் பக்கம், ஞாயிறு உண்டு, திங்கள் உண்டு எந்த நாள் உந்தன் நாளோ” என்பதுதான்.