2025 ஆம் ஆண்டுக்கான ஐ. பி. எல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் வருகின்ற நவம்பர் மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. கடந்த சில முன் தினங்களுக்கு முன் பி.சி.சி.ஐ ஏலத்திற்கான விதிமுறைகளை விளியிட்டது. இந்த விதி படி ஒரு அணியில் உள்ள வீரர்களை தக்க வைத்து கொள்ள ஏல தொகையை ரூ 100 கோடியில் இருந்து ரூ 120 கொடியாக உயர்த்தி உள்ளது.
மேலும் தங்கள் அணிக்காக தக்க வைக்கப்படும் வீரர்கள் பட்டியலை இந்த மாத இறுதியில் அக்டோபர் 31 வெளியிட கால அவகாசம் கொடுத்துள்ளது பி.சி.சி.ஐ. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அனைத்து அணி நிர்வாகிகள் கூறுகிறார்கள். அந்த வகையில் சென்னை அணியும் ஏலத்தில் தக்க வைக்க உள்ள வீரர்கள் தேர்வு செய்ய தொடங்கியுள்ளது.
சென்னை அணியில் ருத்ராஜ் கெயிக்வாட், ஜடேஜா, பதிரானா, மற்றும் தோனி ஆகியோரை தக்க வைக்க முடிவு செய்துள்ளது. தோனி அவர்கள் தனது ஓய்வை அறிவிக்க தயாரிக்கியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான ஐ. பி.எல் கிரிக்கெட் போட்டியிற்காக சி எஸ் கே அணியில் தொடருவரா? என்ற கேள்வி ரசிகர் இடையே எழுந்து இருக்கிறது. சி.எஸ். நிர்வாகம் தோனியை சந்திக்க அனுதி கேட்டு உள்ளது.
அதற்கு தோனி வரும் 28ம் தேதி வரை தன்னை சந்திக்க முடியாது என கூறியிருக்கிறார். இதனால் சி எஸ் கே நிர்வாகம் வரும் 29, 30 தேதிகளில் தோனியை சந்திக்க முடிவு செய்து உள்ளது. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐ.பி.எல்., தொடரில் தோனி இம்பேக்ட் வீரராக இருப்பார் என தகவல் வெளியாகி வருகிறது.