Cricket: என்னுடைய கேரியர் கெடுத்தது தோனிதான் அவரால் தான் நான் நம்பிக்கை இழந்து கேரியரை இழந்தேன் மனோஜ் திவாரி.
இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி ன் 3 விதமான போட்டிகளிலும் உலக கோப்பையை வென்று சாதனை படைத்த ஒரே ஒரு கேப்டன் எம் எஸ் தோனி தான். மேலும் தற்போதைய அணியில் விளையாடி கொண்டிருக்கும் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜடேஜா, அஸ்வின் போன்ற வீரர்களுக்கு ஆரம்ப காலத்தில் வாய்ப்பு கொடுத்து வளர்த்த வீரர்கள்.
அதனால் இந்திய னையின் வருங்காலத்தையும் தோனி சிறப்பாக கட்டமைத்தார் என்றே கூறலாம். ஆனால் 2011 உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய சேவாக், கம்பீர், ஹர்பஜன் சிங் போன்ற ஜாம்பவான் வீரர்கள் அதன் பின் படிப்படியாக கழட்டி விடபட்டனர். அந்த உலக கோப்பை நடந்த முடிந்த பின் சென்னையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் சதமடித்தார் மனோஜ் திவாரி.
அதன் பின் சீனியர் பிளேயர்கள் வந்ததால் அணியில் இடம் கிடைக்காமல் போனது. ஐ பி எல் போட்டிகளிலும் சரியான தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் அப்போதைய கேப்டன் தோனி அவரை கழற்றி விட்டார். இதனால் இந்தியாவுக்கு சதமடித்து கேரியரின் உச்சத்தில் இருந்த எண்ணை தோனி கழற்றி விட்டது என்னுடைய தன்னம்பிக்கையை நொறுக்கியதாக மனோஜ் திவாரி மறைமுகமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் பொதுவாக ஒரு வீரர் தந்து உச்சத்தில் இருக்கும் போது தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு மறுக்க பட்டால் அது அவருடைய தன்னம்பிக்கை உடைக்கும் அதனால் அவருடைய நிலை மாறும். இப்படி கடந்த காலங்களில் ஹர்பஜன் சிங், கவுதம் கம்பீர், யுவராஜ் சிங் ஆகியோர் தோனியை விமர்சித்துள்ளனர்.