தீபாவளி பண்டிகையின் போது ஆம்னி பஸ் கட்டணம் உயர்வின்றி பயணிக்கலாம்!! போக்குவரத்துக்கு துறை அமைச்சர் தகவல்!!

0
113
Omni Bus can travel without fare hike during Diwali!! Minister of Transport informs!!
Omni Bus can travel without fare hike during Diwali!! Minister of Transport informs!!

தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் தாங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பல வழிகளில்  பயணம் செய்கின்றனர். அந்த வகையில் பஸ் பயணம் அதிகம் விரும்பி பயணம் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக ஆம்னி பஸ்களில் பயணம் அதிகம். இந்த ஆம்னி பஸ் பயணம் சாதாரண நாள்களில் கட்டணம் குறைவகாவும் பண்டிகை நாள்களில் மிக அதிகமாகவும் இருக்கும்.

இந்த கட்டண கொள்ளைய தடுக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து ஆணையர் சுன்சோங்கம் ஜடக்சிரு, கூடுதல் ஆணையர் சிவகுமரன், இணை ஆணையர் செந்தில்நாதன், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் அன்பழகன், திருஞானம், அப்சல், முத்துக்குமார், மாறன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்த ஆலோசனை முதல்வர் நடத்த உத்தரவிட்டார். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கட்டணம் உயர்வின்றி தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் பயணம் செய்ய உதவுவதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர். ஆனால் கடந்த வருடம் விட இந்த வருடம் முன்ன்பதிவு குறைந்திருப்பதாக ஆம்னி பஸ் சங்கம் கூறியுள்ளது. இந்த கட்டணம் அதிகரிக்க ஓரு காரணம் மட்டும்தான் அது சங்கத்தில் தொடர்பு இல்லாமல், புதிதாக இயக்கம் பேருந்துகளில் மட்டும் அதிகம் வசூல் செய்துவிடுகிறது.

அதனையும் இந்த வருடம் முழுவதும் தடுத்து நிறுத்தபடும் என ஆம்னி பஸ் சங்கம் கூறியுள்ளது. மேலும் இது தொர்பாக புகார்க்களிக்க 1800 425 6151 எண்ணிற்கு அழைக்கலாம். இதற்கிடையே, அரசு பேருந்துகளில் முன்பதிவு அதிகரித்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.

Previous articleஎன்னுடைய கேரியரை கெடுத்தது தோனிதான்!! மறைமுகமாக விமர்சித்த இந்திய வீரர்!!
Next articleதமிழக அரசின் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! இவர்களுக்கு மட்டும் 10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் இலவசம்!