தமிழக பெண்களுக்காக முதல்வர் மு க ஸ்டாலின் அற்புதமான திட்டத்தை துவங்கி வைத்துள்ளார். தமிழக பெண்களுக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. மேலும், இதற்கு நவம்பர் 23ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின், தமிழக மக்களுக்கும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு என பல சிறப்பு திட்டங்களை உருவாக்கியுள்ளது.
பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் :-
இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமை தொகை, புதுமை பெண் திட்டம் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பெண்களுக்கு கடன் உதவிகளும் வழங்கப்பட்ட வருகிறது.
பெண்களுக்கான பிங்க் நிற பேருந்து தொடர்ந்து தற்போது பெண்களுக்கான பிங்க் நிற ஆட்டோக்கள் வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்தப் பெண் நிற ஆட்டோக்களின் செயல்பாட்டினை முதலில் சென்னையில் துவங்க இருக்கிறது.
இந்த பிங்க் நிற ஆட்டோக்களின் மூலம் பெண்கள் வேலை வாய்ப்பினை பெறலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த ஆட்டோகளை ஓட்டுபவர் பெண் ஓட்டுனர்களே ஆவார். எனவே இந்த பிங்க் நிற ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த முடிவினை பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு எடுத்துள்ளனர்.
இந்த திட்டத்தில் இணைய பத்தாம் வகுப்பு முடித்து இருப்பதோடு ஓட்டுனர் உரிமம் பெற்றிருப்பது அவசியம். மேலும் விண்ணப்பிக்க கூடியவர்களின் வயது வரம்பு 25 முதல் 45 வயது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விதவை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 23ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
தற்போதைக்கு 250 gps பொருத்தப்பட்ட ஆட்டோ கிளை உள்ள நிலையில் முதலில் விண்ணப்பிக்கும் 250 பேருக்கு மட்டுமே இந்த பிங்க் நிற ஆட்டோ கிடைக்கும் என்றும், இதனை பெற விரும்புவோருக்கு ரூ .1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.