Tamilnadu: மனமகிழ் மன்றம் என்ற பெயர்களில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் ராமதாஸ் கோரிக்கை.
தமிழகத்தில் மொத்தமாக உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை 4829. இந்த மதுக்கடைகளில் மட்டும் வருடத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. அதிகப்படியான வருமானம் இந்த மதுகடைகளிலிருந்தே கிடைக்கிறது.
மதுக்கடைகளில் பொதுவாக தினமும் ரூ.150 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகின்றது, மேலும் விடுமுறை நாட்களில் இதை விட அதிகமாக விற்பனை ஆகிறது. இதுவே பண்டிகை,மற்றும் சிறப்பு நாட்களில் இதுவே விற்பனை இருமடங்காக அதிகரிக்கிறது.அதிலும் குறிப்பாக டாஸ்மாக் தீபாவளி தினங்களில் இந்த வருமானமானது 3 மடங்கு பெருகிவிடும்.
கடந்த வருடம் தீபாவளிக்கு 2 நாட்களில் மட்டும் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.இதனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.600 கோடிக்கு விற்பனை ஆகலாம் என கூறப்படுகிறது. இதனால் ரூ.2 லட்சத்துக்கும் மேல் விற்பனை ஆகும் 3,500 மதுக் கடைகளில் விற்பனை கவுண்டர்களை கூடுதலாக அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார், இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார், டாஸ்மாக் கடைகளில் விற்க படுவது போல் மனமகிழ் மன்றங்களில் அனைத்து வகையான மது வகைகளும் விற்கப்படுகின்றன. 900 மனமகிழ் மன்றங்களும், தற்போது தி மு க ஆட்சியில் 600 என் மொத்தம் 1,500 மனமகிழ் மன்றங்கள் உள்ளன.
அந்த மனமகிழ் மன்றங்கள் மூடப்பட்ட வேண்டும். திமுக ஆட்சியில் மதுவிலக்கு அமல் படுத்துவது என்பது ஏமாற்றுவேலை. மேலும் பேசிய அவர் தீபாவளி விடுமுறைக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கப்படுவது புது ஊழலுக்கு வழிவகுக்கும். இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று கீடுகொண்டுள்ளார்.