மீண்டும் இணைந்து நடிக்கும் வடிவேல், பகத் பாசில் “மாரீசன்” படத்தில்!!

0
82
Vadivel and Bhagat Basil will be acting together again in the movie "Marisan"!!
Vadivel and Bhagat Basil will be acting together again in the movie "Marisan"!!

மாமன்னன் படத்துக்குப் பிறகு நடிகர் வடிவேலுவும், பகத் பாசில் இப்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் உதயநிதி, வடிவேல், மற்றும் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், நடித்து கடந்த ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி வெளியானது.

இந்த படத்தில் மாமன்னன் கதாபாத்திரத்தில் வடிவேலும், ரத்தினவேல் கதாபாத்திரத்தில் பகத் பாசில்லும் நடித்திருந்தனர். இதில் மாமன்னன் கதாபாத்திரத்தை விட பகத் பாசிலின் ரத்தினவேல் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இந்த கதாபாத்திரத்தை சமூக வலைதளங்களில் அதிகம் பாராட்டி பதிவிட்டனர். மாமன்னன் படத்திற்கு பிறகு வடிவேல், பகத் பாசில் இணைந்து “மாரீசன்” படத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கி யுவன்சங்கர்ராஜா இசையமைக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மேலும் அடுத்தகட்ட படப்பிடடிப்பு சென்னையில் நேற்று துவங்கியது. இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என இயக்குனர் தெரிவித்துள்ளர். ‘மாமன்னன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு வடிவேலுவுடன் இணைந்து பகத் பாசில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

Previous articleதீபாவளிக்கு மதுக்கடையை 3 நாட்கள் மூட வேண்டும்!! டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்!!
Next articleடெஸ்ட் கிரிக்கெட் போட்டி!! ஆஸ்திரேலிய வீரரை பின்னுக்கு தள்ளி முன்னேறிய அஸ்வின்!!