ஒவ்வொரு ஆண்டு ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் தமிழக முழுவதும் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா “திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலில்” மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா நாட்களில் ஒரு நாளைக்கு 1 லட்சம் முருக பக்தர்கள் திருச்செந்தூர் வருகிறார்கள். சுப்பிரமணிய கோவிலில் சாதாரண நாட்களில் இலவச தரிசன உள்ளது. விரைவு தரிசனத்துக்கு ஒரு நபருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் விழா நாட்களில் இந்த கட்டணம் இரண்டு மடங்காக உள்ளது.
அதாவது நபருக்கு 200 ரூபாயாக கோவில் நிர்வாகத்தால் வசூலிக்கப்படுகிறது. கந்த சஷ்டி விழாவின் பொது சிறப்பு தரிசன கட்டணம் ரூ 1000-யாக நிர்ணயம் செய்து கோவில் நிர்வாகம் வசூலித்து வந்தது. இதை எதிர்த்து 200 முருக பக்தர்கள் கோவிலில் போராட்டம் செய்து கைதானர்கள். இதனால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கோவில் நிர்வாகம் நிறுத்தி வைத்தது. மேலும் கந்த சஷ்டி விழா நாட்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை உயர்த்துவதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இந்த விவகாரம் தொடர்பான மனு, நீதிபதிகள் சுப்பிரமணி, விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கோவில் தரிசன கட்டணத்தை ஆயிரம், இரண்டாயிரம் என வசூலித்தால், ஏழை மக்கள் எவ்வாறு சாமி தரிசனம் செய்வார்கள்? ஏழைகள் சாமி கும்பிட கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோவிலா? என் சரமாரி கேள்வி எழுப்பியது. மேலும் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை நவம்பர் 7 தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.