வேலூர் காட்பாடியில் இருந்து சென்னை வருவதற்கு வந்தே பாரத் ரயிலில் ஏற முயன்ற திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் உள்ள அவருடைய ஆதரவாளர்கள் அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடல்நிலையை தீவிர கண்காணித்து வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது.
திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும் துரைமுருகன் இவருக்கு வயது 86 தற்போதைய நீர்வளத்துறை அமைச்சராக உள்ளார். இவர் வயது போக்கு காரணமாக அடிக்கடி மருத்துவமனைகளில் சேர்க்கபடுவது வழக்கமாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரைமுருகன் அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது இதை தொடர்ந்து அவர் அவ்வப்போது அடிக்கடி மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் இன்று வேலூர் காட்பாடியில் இருந்து சென்னை திரும்ப வந்தே பாரத் ரயிலில் ஏற முயன்ற போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவர் உடல்நிலையை பொருத்து அவர் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது