Cricket: 12 வருடமாக டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்று வரும் இந்திய அணி தனது வெற்றியை தொடருமா?
2012 ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி தொடர்ந்து சொந்த மண்ணில் இதுவரை நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. தொடர்ச்சியாக 18 போட்டிகளில் தனது வெற்றியை பதிவு செய்து வருகிறது. இந்த தொடர் சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காப்பாற்றுவாரா ? என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.
2012 ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி அந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற விகிதத்தில் வெற்றி பெற்றது.இதுவே இந்திய அணி கடைசியாக தனது சொந்த மண்ணில் அடைந்த தோல்வி இதன்பின் இந்திய அணி தொடர்ச்சியாக 18 வெற்றிகள் பெற்று சாதனை படைத்து வருகிறது.
ஆனால் இந்த சாதனை தொடருமா? அல்லது இந்த சாதனையை நியூசிலாந்து அணி முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து புனேவில் இந்த தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இப்போது நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த மைதானத்தில் 300 ரன்களுக்கு மேல் எடுத்தால் வெற்றி பெறுவது கடினம் என்று கூறப்படும் நிலையில், தற்போது 301 ரன்கள் கடந்து பேட்டிங் செய்து வருகிறது இதனால் தொடர் வெற்றியை அடையுமா இந்திய அணி.