PMK VS: பாமக சங்கமித்ரா அன்புமணியுடன் விடுதலை சிறுத்தை துணை கட்சி பொதுசெயலாளர் வன்னி அரசு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்.
விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான வன்னி அரசு பாமக விலிருக்கும் ஒருவரை கூட விட்டு வைக்காமல் மிகவும் மோசமாக விமர்சனம் செய்திருப்பார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
இந்நிலையில் தற்பொழுது ஜெயராம் மகன் ஜான்சன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட சங்கமித்ரா சௌமியா அன்புமணி தயாரிக்கும்க் படத்திற்கு வன்னி அரசு பாராட்டு தெரிவித்ததோடு சேர்ந்து எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் உள்ளார்.
திமுக-வின் கூட்டணிக்கு முன் விடுதலை சிறுத்தைகள் பாமக உடன் இருந்த பொழுது எந்த ஒரு இடத்திலும் மரியாதைக்கு குறை வைத்ததில்லை என்று கூறலாம். ஆனால் திமுகவுடனான கூட்டணியில் உட்காரும் நாற்காலியி முதல் அனைத்தும் வேறுபாடுதான்.
இதனை அவர்களை உணரும் வகையில் சமீபத்தில் திருமா, எங்கள் இனத்திலிருந்து ஒருவர் கூட முதல்வராக முடியாது எனக் கூறினார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் அன்புமணி ராமதாஸ் அவர்கள், தலிதினத்திலிருந்து ஒருவரை முதல்வர் ஆக்கி காட்டுவோம் என பேசியிருந்தார்.
இவ்வாறு பாமக விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததிலிருந்து பாமக மீது பாய்ந்து வந்த அனைத்து விமர்சனங்களும் குறைய தொடங்கியது. இருப்பினும் தங்களது குடும்ப உறுப்பினரை கடுமையாக விமர்சனம் செய்த ஒருவருடனே பொதுவெளியில் அதனை காட்டிக் கொள்ளாமல் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் இவர்களின் போக்கானது பாராட்டிற்குரியது.