பொதுமக்கள் தினசரி சாப்பிட்ட இந்த மாத்திரைகள் போலியானவை!! மத்திய தரக்கட்டுப்பாடு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

0
75
These pills which are taken daily by the public are fake!! Shocking information released by Central Quality Control!!
These pills which are taken daily by the public are fake!! Shocking information released by Central Quality Control!!

CDSCO: மக்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளில் 40 க்கும் மேற்பட்டவை போலியானவை என தெரியவந்துள்ளது.

சீடிஎஸ்சிஓ என்ற மத்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பானது எந்தெந்த மருந்துகள் போலியாக தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் கிட்டத்தட்ட 3000 திற்கும் மேற்பட்டவைகளை சோதனை செய்ததில்  தினசரி மக்கள் எடுத்துக்கொள்ளும் 49 மருந்துகள் தர கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் போலி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர். இந்த 49 மருந்துகளும் ஒரு சதவீதம் கூட பாதுகாப்பானதாக இல்லை என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டின் தலைவர் ராஜு சிங் கூறியுள்ளார். குறிப்பாக மிகப்பெரிய நிறுவனமான இந்துஸ்தானியின் ஆன்டிபயாட்டிக்ஸ், மெற்றானிடசோல் மாத்திரை எனத் தொடங்கி ரெயின்போ லைஃப் சயின்ஸ் மாத்திரை, ஆக்ஸிடாஸின் ஊசி என அனைத்தும் போலியானவை கண்டறியப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி ரோலர் பாண்டேஜ் , சோடியம் டேப்லெட் உள்ளிட்டவையும் இந்த பட்டியலில் சேரும். இவ்வாறு மத்திய மாநில தரக்கட்டுப்பாடு எடுத்துள்ள இந்த நடவடிக்கையானது சந்தையில் போலி மருந்து மாத்திரைகள் தயாரிப்பின் விகிதத்தை குறைக்க பயன்படும்.

Previous articleமீண்டும் வெடிக்கும் அடுத்த கட்ட போர்!! குண்டு மழை பொழிய காத்திருக்கும் இஸ்ரேல் மற்றும் ஈரான்!!
Next articleகடன் கட்டவில்லையென்றால் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியாது?