TVK: தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து 100 உறுப்பினர்கள் விலகி பாமக வில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய்-யின் தவெக மாநாடானது விக்ரவாண்டி சாலையில் மிகவும் பிரம்மாண்டமாக நாளை நடைபெற உள்ளது. விஜய் கட்சி குறித்து அறிவிப்பு வெளியான சில மாதங்களிலேயே உறுப்பினராக சேருவதற்கு அனைவரிடத்தும் டிஜிட்டல் முறையை கொண்டு வந்தார்.
இது குறித்த செயலியை அறிமுகப்படுத்தி கிட்டத்தட்ட இரண்டு கோடி பேர் இணைய வேண்டும் என்ற இலக்கையும் நிர்ணயம் செய்தார். கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் வரை கட்சி உறுப்பினர்களாக சேர்ந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் நாளை மாநாடு நடைபெறுவதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விஜய் அறிவுறுத்தியும் வருகிறார்.
தொண்டர்களை நேரடியாக சந்திக்க வேண்டுமென யாரும் அமைக்காத ரேம்ப் உள்ளிட்டவைகளை அமைத்தும் உள்ளனர். இது பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்லலாம். அதேபோல மாநாட்டில் இடம்பெற்றுள்ள வீர மங்கைகளின் கட்டவுட்டும் அரசியல் ரீதியாக பேசப்பட்டு வருகிறது.
இச்சமயத்தில் திடீரென்று தமிழக வெற்றிக் கழகத்திலிருந்த 100 உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகியுள்ளனர். இவர்கள் அனைவரும் பாமகவில் ராமதாஸ் முன்னிலையில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாகவே இவ்வாறு உறுப்பினர்கள் விலகியது விஜய்யின் அரசியல் நகர்வை சற்று பின்னோக்கமடைய செய்கிறது. ஆனால் இந்த அறிவிப்பு தற்பொழுது வரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.