3 வருடத்திற்கு பிறகு சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி !! வீடு திரும்பிய இங்கிலாந்து!!

0
109
Pakistan's first win at home after 3 years
Pakistan's first win at home after 3 years

Cricket: 3 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரில் வெற்றியை சுவை பார்க்காத பாகிஸ்தான் அணி இங்கிலாந்து-பாகிஸ்தான் போட்டியில் சுவைத்தது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி  3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் மூன்றாவது போட்டி நடைபெற்று வந்த நிலையில் பாகிஸ்தான் அணி  9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி 2021-ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் எந்த டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறவில்லை. இந்த வெற்றியால் இந்த மூன்று வருட சோதனையை சாதனையக்கியுள்ளது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிக்கு இடையிலான இறுதி போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் இங்கிலாந்து ஆணியும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் ஆணியும் வெற்றி பெற்று (1-1)என்ற நிலையில் சமநிலையில் இருந்தது. இதில் வெல்ல போவது யார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3வது போட்டி தொடங்கியது

இந்த போட்டியில்  முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் 267 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது, இதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 344 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 112 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Previous articleஅரசு போக்குவரத்து துறையை தனியார் மையமாக்க திமுக போட்ட பலே திட்டம்!! வெட்ட வெளிச்சமாக்கிய பாமக தலைவர்!!
Next articleஅரசின் ஸ்பெஷல் தீபாவளி பரிசு!! உடனே வாங்கிகோங்க!! மிஸ் பண்ணிடாதிங்க!!