கிராமப்புற பெண்கள் சுயத் தொழில் செய்ய மத்திய அரசு உத்தியோகினி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.இத்திட்டம் முழுக்க முழுக்க பெண்களுக்காக தொடங்கப்பட்ட திட்டமாகும்.இத்திட்டத்தில் மூலம் அதிகபட்சம் ரூ.3,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது.
இந்திய பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு மிக முக்கியமானதாகும்.இதன் காரணமாகவே கிராமப்புற மற்றும் வளர்ச்சி அடையாத இடங்களில் உள்ள பெண்களின் சுயத் தொழில் செய்ய வேண்டும் என்ற கனவிற்கு நிதி ஒரு தடையாக இருக்க கூடாது என்ற காரணத்திற்காக இந்த உத்தியோகினி திட்டம் கொண்டுவரப்பட்டது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இருக்க வேண்டிய தகுதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.18 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் திட்டத்திற்கு தகுதியானவர்கள் ஆவர்.ஆண்டு வருமானம் ரூ.1,50,000 மிகாமல் இருக்க வேண்டும்.ஏழை பெண்கள்,விதவை பெண்கள்,மாற்றுத்திறனாளி பெண்கள் வட்டியில்லாமல் ரூ.3,00,000 வரை கடன் பெற முடியும்.
உத்தியோகினி திட்டத்தின் மூலம் 88 சிறுத்தொழில்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது.இந்த கடன் திட்டத்தில் 30% வரை மானியம் வழங்கப்படுகிறது.
உத்தியோகினி திட்டத்திற்கு தேவைப்படும் ஆவணங்கள்:
1)ஆதார் கார்டு
2)பான் கார்டு
3)பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
4)சாதி சான்றிதழ்
5)வருமானச் சான்றிதழ்
6)வங்கி பாஸ் புக்
உத்தியோகினி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
நீங்கள் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்தால் சுயத்தொழில் துவங்க கடனுதவி கிடைக்கும்.