தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்!! இரத்து செய்யப்பட்ட இந்திய விமான சேவை!!

0
107
Continued bomb threats!! Canceled Indian Airline!!
Continued bomb threats!! Canceled Indian Airline!!

இந்தியாவில் 30 க்கும் மேற்ப்பட்ட விமானங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு முதல் முறை அல்ல. இது போன்று வெடிகுண்டு மிரட்டல்கள் அடிக்கடி வருவது குறிப்பிடத்தக்கது.

இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனங்களை சேர்ந்த 11 விமானங்களுக்கு நேற்று குறுஞ்செய்தி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.

இதனைக் குறித்து, ஏர் இந்தியா செய்தியாளர்களிடம், வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட விமானங்களுக்கு சரியான முறையில் பாதுகாப்பானது உறுதி செய்யபட்டது. இதனை ஒழுங்கு முறை அதிகாரிகள் சரிபார்த்தனர் என்றும் கூறியுள்ளனர்.

கடந்த 13 நாட்களில் 300க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுபட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மிரட்டல்கள் சமூக வலைதள பக்கங்களில் தான் அதிகம் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான பதிவுகளை பேஸ்புக் மற்றும் எக்ஸ் தளம் உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அவ்வாறு நீ கவலை இல்லை என்றால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவதைத் தொடர்ந்து மத்திய அரசு சமூக வலைதள பக்கங்களுக்கு சில வழிகாட்டுதல்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் 10 ஹோட்டல்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleநீங்கள் காலை நேரத்தில் பின்பற்றும் 5 கெட்ட பழக்கங்கள்!! இதை தொடர்ந்தால் நோயாளி ஆகிவிடுவீர்!!
Next articleமக்களுக்கு குட் நியூஸ்!! குறைக்கப்படும் ஜியோ மற்றும் ஏர்டெல் ரீசார்ஜ் பேக்குகள்!