தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

0
104
Special train services on the occasion of Diwali!! Southern Railway Notice!!
Special train services on the occasion of Diwali!! Southern Railway Notice!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து இடையூறாக இருக்கக் கூடாது என்று மதுரை மற்றும் கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பில் விடப்பட்ட ரயில் சேவைகள் :-

வண்டி எண்: 06076/06075 மதுரை – தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். வரும் 29, 30 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் என்றும், மதுரைக்கு அடுத்த நாள் அதிகாலை 1.20 மணிக்கு சென்றடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.மறுபடியும் மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து காலை 8.15 மணிக்கு கிளம்பும் ரெயில் தாம்பரத்திற்கு பிற்பகல் 3.25 மணிக்கு வந்து சேரும் என்றும்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் சிறப்பு ( ரயில் எண் ) வண்டி எண்; 06079.செண்ட்ரலில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் கன்னியாகுமரிக்கு மறுநாள் நண்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து 28 ஆம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Previous articleமக்களுக்கு குட் நியூஸ்!! குறைக்கப்படும் ஜியோ மற்றும் ஏர்டெல் ரீசார்ஜ் பேக்குகள்!
Next articleசென்னை முதல் தமிழக வெற்றி கழக மாநாடு வரை!! சைக்கிளில் சென்ற மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை!!