TVK: தவெக மாநாட்டை விட்டு கொத்து கொத்தாக வெளியேறும் தொண்டர்கள்!!

0
647
TVK: Volunteers leaving the conference in droves!!
TVK: Volunteers leaving the conference in droves!!

TVK:தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் நீர்ச்சத்து குறைப்பாட்டால் மயங்கி விழும் அவலம்.

தவெக மாநாடானது சரிவர திட்டமிடாமல் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி தற்பொழுது பலரின் மத்தியிலும் எழுந்துள்ளது. வெயில் தாக்கத்தினால் பெண்கள் ஆண்கள் என பலரும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஒருவர் பின் ஒருவராக மயங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி இவர்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கவில்லை. இதனின் ஒரு படி மேலாக குடிநீர் பாட்டில்கள் தூக்கி வீசப்பட்ட வீடியோவும் வெளியானது.

இவ்வாறு இருக்கையில் பல தொண்டர்கள் நாற்காலியை கையில் எடுத்துக்கொண்டு மாநாட்டை விட்டு வெளியேறவும் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நிழல் உள்ள இடத்தில் இருப்பதற்காக வெளியேறுவதாக கூறியுள்ளனர். இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் விஜய் பல கேள்விகளை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதர கட்சி மாநாடுகளை ஒப்பிட்டு பார்க்கையில் வரும் மக்களுக்கு தேவையான முன்னடவடிக்கைகளை சரிவர செய்யவில்லை என்றே தெரிய வருகிறது.

Previous articleதவெக மாநாட்டில் கழிவறை இடத்தில குடிநீர்.. ஏதும் சரியில்லை!! தொண்டர்கள் கடும் அதிருப்த்தி!!
Next articleவிஜய் எனது நண்பர் தான்.. தவெக மாநாட்டிற்கு எனது வாழ்த்துக்கள்- துணை முதல்வர் உதயநிதி!!