பாஸ் இருந்தால் தான் உள்ளே அனுமதி.. தவெக மாநாட்டிற்கு போலீஸ் போட்ட ரூல்ஸ்!!

0
122
If you have a pass, you will be allowed to enter.
If you have a pass, you will be allowed to enter.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான முதல் பொதுக்கூட்டத்தினை இனிதே துவங்கி வைத்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள். நள்ளிரவில் இருந்து காத்திருந்த மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிப்பதாக இருப்பினும், இன்னும் கட்டுக்கடங்காமல் பலர் வந்த வண்ணம் உள்ளனர்.

காவல்துறையினர் அவர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் ஆர்ப்பரிக்கும் மக்கள் போலீசாரை திணற வைக்கின்றனர் என்றே கூறலாம்.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்து கொள்ள தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் பாஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், பாஸ் இல்லாதவர்களும் ஆயிரக்கணக்கில் வந்துள்ளதால் மாநாடு நடக்கும் இடத்தில் பெரிதளவு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது. மேலும் பலர் தாங்கள் வந்த வண்டிகளை சாலையிலேயே நிறுத்திவிட்டு இறங்கி நடந்தும் வந்து கொண்டிருக்கின்றனர். மாநாட்டு திடலில் இடம் முழுமையாக நிரம்பி வழியும் நிலையில், திடலுக்கு வெளியிலும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டும் உள்ளே செல்லுங்கள் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

Previous articleவிஜய் எனது நண்பர் தான்.. தவெக மாநாட்டிற்கு எனது வாழ்த்துக்கள்- துணை முதல்வர் உதயநிதி!!
Next articleசற்றுமுன் தவெக விழா மேடையில் விஜய்!!! தொண்டர்கள் கொண்டாட்டம்!!