தீபாவளியை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படை எடுக்க தொடங்கியுள்ளனர். இவ்வாறு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் சுங்கச்சாவடிகளில் பல மணி நேரம் காத்து கிடக்க வேண்டியிருக்கிறது. எனவே, எதற்காக நெடுஞ்சாலை துறை ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுங்கச்சாவடிகளில் பணம் கட்ட தேவையில்லை என்றும், இலவசமாக சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம் என்றும் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வருகிற வியாழக்கிழமை ( 31.10.2024 ) அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு தொடர் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள், இதனால் நெரிசல் ஏற்பட்டு சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படும்.
இதனை தடுக்கும் வகையிலும், மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் இவ்வாறு முடிவு எடுத்ததாக அரசு நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிவிப்பு.
இதனைத் தொடர்ந்து 29 மற்றும் 30 தேதிகளில் தமிழக நெடுஞ்சாலைகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பின் சுங்க கட்டண வசூலை தவிர்த்து விடுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.வாகன நெரிசலை தவிர்க்க சென்னை – திருச்சி இடையே சுங்கக்கட்டணம் வசூல் ரத்து செய்யப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை முகமையின் பிராந்திய அலுவலர் வீரேந்திர சம்பியால் தெரிவித்துள்ளார்.