புயல் பதிப்பில் இதுவரை 126 பேர் பலி!! தொடர் மீட்ப்புபணி மேலும் அதிகரிக்கும்!!

0
78
126 people have died in the storm version so far!! Continued recovery will increase!!
126 people have died in the storm version so far!! Continued recovery will increase!!

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ்ன் வடமேற்கு பகுதியான படாங்காஸ் மாகாணத்தை, “டிராமி” புயல் தாக்கியது அதன் பாதிப்பாக கனமழை, வெள்ளப்பெருக்கு, மற்றும் நிலசரிவு ஆகியவைகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது வரை 126 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியானது. அவர்களை படகுகள் வாயிலாக மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். மேலும் இன்னும் அங்கு கனமழை நீடிப்பதால் ஆங்காங்கே நிலசரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு பலர் சக்திக்கு அடியில் மற்றும் மண்ணில் புதைந்ததாக கூறப்படுகிறது.

அவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  40க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அந்த நாட்டில் பதற்றம் நிலை மேலும் அதிகரித்துள்ளது.

Previous articleபிரபல சீரியல் நடிகை விவாகரத்து!! அதிரும் சின்னத்திரை நட்சத்திரங்கள்!!
Next articleமூத்த குடிமக்களா நீங்கள்?? இதோ உங்களுக்காக பிரதமரின் அட்டகாசமான திட்டம்!!