கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இந்த படத்திற்கு இரண்டு வரிகளில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் ஆனர். கவின் நடித்த சின்ன திரை நாடகம் பட்டிதொட்டி எல்லாம் நல்ல வரவேற்ப்பு பெற்றது. அவர் நடித்த சரவணன் மீனாட்சி நாடகம் செம ஹிட். அதில் அவர் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த சின்னத்திரையுலகமும் திரும்பி பார்க்க செய்தார். இந்த தொடர் கிட்டதிட்ட 3 சீசன் எடுக்கப்பட்டது அதில் கவின் 2வது சீசன்னில் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதன் பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர் ஆனால் அவர் பாதியில் 5 லட்சம் பணம் பெற்று வெளிய வந்தவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார். அதில் டாடா, லிஃப்ட், ஸ்டார் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தற்போது தீபாவளிக்கு வெளிவர இருக்கும் “பிளெடி பெக்கர்” திரைப்படம் அவர் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்புடன் இருக்கிறார்கள். இந்த படம் நெல்சன் தயாரித்து சிவபாலன் இயக்கி கவின் நடிக்கிறார். இதை அடுத்து கிஸ், ஆண்ட்ரியா உடன் ஒரு படம், நயன்தாரா ஜோடியாக ஒரு படம் என லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.
இந்த நிலையில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை விஷ்ணு எடவன் இயக்கி செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்திற்கு “ஹாய்” என இரண்டு எழுத்தில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.