கள்ளக்காதலால் நேர்ந்த கொடூர சம்பவம்!! பெண்ணின் கழுத்தை அறுத்த பக்கத்து வீட்டுக்காரன்..அதிர்ச்சியில் உறவினர்கள்!!

0
309
Horrible incident due to forgery!! The neighbor who cut the woman's neck..Relatives in shock!!
Horrible incident due to forgery!! The neighbor who cut the woman's neck..Relatives in shock!!

Thanjavur: தஞ்சாவூரில் ரோஜா என்ற பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் அதி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் நடுவிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தான் ரோஜா. இவருக்கு வயது 32, ராஜா என்ற கணவர் உள்ளார். இந்த நிலையில் ரோஜா திடீரென கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். ரோஜா எப்போதும் போல 100 நாள் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தார்.

அப்போது ஆரோக்கியதாஸ் என்பவர் ரோஜாவை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். இது மட்டும் அல்லாமல் அவரது உடலை தரதரவென இழுத்து வந்துள்ளார். இதை அறிந்து விரைந்து வந்த காவல்துறை ஆரோக்கியதாஸ் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

அதில் கள்ள காதல் விவகாரத்தால் ரோஜா படுகொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டு அப்பகுதி மக்கள் பயத்தில் உள்ளார்கள். மேலும் காவல்துறை ரோஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Previous articleதவெக – அதிமுகவுடன் கூட்டணி!! பவன் கல்யாண் பாணியை பின்பற்றும் விஜய்!!
Next articleதவெக மாநாட்டின் சொதப்பல்!! யார் இந்த பெண் என்ன குரல்!!