வாடிக்கையாளர்களிடையே அசைக்க முடியாத நம்பிக்கை!! இந்தியாவின் சிறந்த வங்கி எது என்று தெரியுமா ?

0
70
Unwavering trust among customers!! Do you know which is the best bank in India?
Unwavering trust among customers!! Do you know which is the best bank in India?

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் 31 ஆம் ஆண்டுக்கான, சிறந்த வங்கிக்காக விருது வழங்கும் விழாவில் எஸ்பிஐ வங்கி அந்த விருதினை வென்றது.

இந்த விருதினை எஸ்பிஐ வங்கி குழுமம் சார்பில் எஸ் பி ஐ தலைவர் சி எஸ் செட்டி பெற்றுக்கொண்டார்.

நாடு முழுவதும் உள்ள மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றும் வங்கியின் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையால் தான் இவ்விருதினை இன்று நான் பெற்றுள்ளேன் என்றும் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக குளோபல் ஃபைனான்ஸ் வழங்கும் சிறந்த வங்கிக்கான விருதுகள் உலக நிதி நிறுவனங்களை மதிப்பிடுவதற்கான நம்பகமான தரத்தை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1806 ஆறாம் ஆண்டு முதன்முதலில் கொல்கத்தா வங்கியாக தொடங்கப்பட்ட இந்த வங்கி பின்னர், 1955ஆம் ஆண்டு இந்திய அரசு பாரத இம்பீரியல் வங்கியை நாட்டுடமையாக்கியபோது பாரத ரிசர்வ் வங்கி 60% முதலீடு செய்து பாரத ஸ்டேட் வங்கி என பெயரிடப்பட்டது. 2008ஆம் ஆண்டு பாரத ரிசர்வ் வங்கியின் பங்குகளை இந்திய அரசே வாங்கியது. அதன் மூலம் ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி.16000 கிளைகள் கொண்டுள்ள ஸ்டேட் வங்கிக் குழுமம் இந்தியாவிலேயே கூடுதலான கிளைகள் கொண்டுள்ள வங்கியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகூந்தல் நீளமாக வளர உதவும் ஹெர்பல் ஆயில்!! ஜஸ்ட் 2 பொருள் இருந்தால் போதும்!!
Next articleசர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பான செய்தி வழங்கிய தமிழ்நாடு அரசு!!