நாங்கள் அனைவரும் அடிமைகள் தான்!! கலைஞரின் குடும்பம் தான் எங்களை ஆள வேண்டும்!! திமுக நிர்வாகி சர்ச்சை பேட்டி

0
453
We are all slaves!! Artist's family should rule us!! DMK executive controversial interview
We are all slaves!! Artist's family should rule us!! DMK executive controversial interview

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற்ற முடிந்த நிலையில், இக்கழகத் தலைவரான விஜய் அவர்கள் எங்கள் கட்சியின் எதிரிகள் என்று குறிப்பிட்டு கூறியது திமுக மற்றும் பாஜகவினரிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கழகத் தலைவர் விஜய் அவர்கள் கூறியதை திமுகவின் தொண்டர்கள் பலரும் விமர்சித்தும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். மேலும் விஜய்க்கு எதிரான கருத்துக்களை வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.

இவ்வாறு திமுகவினர் தெரிவித்து வரும் கண்டனங்களுக்கு மறு பதில் அளிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழக செயலாளர்களும் பல வீடியோக்கள் புகைப்படங்கள் மீம்ஸ்கள் போன்றவைகள் மூலம் தங்களது பதில்களை வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் தொண்டர் ஒருவர் சர்ச்சைக்குரிய விதமாக பேசியது தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

எங்களை பொறுத்தவரையில் கலைஞர் அவர்களது குடும்பம் தான் இந்த நாட்டை ஆள வேண்டும். அதுதான் எங்களது தார்மீக விருப்பமும் கூட இதற்காக எங்களை அடிமைகள் என்று சொன்னாலும் கொத்தடிமைகள் என்று கூறினாலும் கவலை இல்லை. நாங்கள் அடிமைகள் தான் கலைஞர் வீட்டின் கொத்தடிமைகள் தான். அதில் எங்களுக்கு எந்தவித அவமானமும் இல்லை என்று திமுக தொண்டர் தெரிவித்துள்ளார்.

Previous articleநடிகர்களுக்கே எதுவும் செய்திடாத விஜய் அரசியலில் என்ன செய்யப் போகிறார்!! காமெடி நடிகர் கிளி ராமச்சந்திரன்
Next articleமாநாட்டுக்கு சென்று பலியானோர் எண்ணிக்கை மேலும் உயர்வு!! அதிர்ச்யில் தவெக தலைவர்!!