வரலாற்றில் முதல்முறையாக ஆஸ்கர் அவார்ட் நிகழ்ச்சி கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் கூடும் எல்லா இடங்களும் மூடப்பட்டு எந்த நிகழ்ச்சியும் நடைபெறாமல் உள்ளது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நாற்பது ஆண்டுகளில் முதல் முறையாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதால், எல்லா மொழி பட உலகமும் முடங்கிக் கிடக்கிறது. தியேட்டர்கள், மால்கள் போன்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்புகள் நடக்க முடியாத காரணத்தினால், படங்கள் அனைத்தையும் இணையதளத்தில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். இணையதளத்தில் வரும் படங்களுக்கும் ஆஸ்கர் விருது கொடுக்க அனுமதிக்கப்படும் என்ற விதிகளை தளர்த்தி ஆஸ்கர் குழு சமீபத்தில் அறிவித்துள்ளது.
இதுவே முதல் முறை ,இதற்கு முன்பு தியேட்டர்களில் திரையிட்ட படங்கள்களுக்கு மட்டுமே ஆஸ்கர் தகுதி பெற்றிருந்தனர். ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்த வருடம் பிப்ரவரி மாதம் 28ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனாவால் விருது வழங்கும் விழா நான்கு மாதங்களுக்கு தள்ளி வைத்து விழாவை நடத்த அக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.93 வது ஆஸ்கர் விருது இந்த வருடம் இனி திட்டமிட்டபடி நடக்க இயலாது என்று அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் திங்களன்று அறிவித்துள்ளது.மேலும் 2021 ஏப்ரல் 25ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அந்த அமைப்பு முடிவெடுத்துள்ளது.